search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்"

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முகமது ஹபீஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக துபாய் டெஸ்டில் சதம் அடித்தார் #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் இன்று தொடங்கியது. பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் பிலால் ஆசிப், ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட், ஆரோன் பிஞ்ச், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். 37 வயதாகும் முகமது ஹபீஸ் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து தற்போதுதான் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். அணியில் இடம்பிடித்த அவருக்கு தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது.



    இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், நாதன் லயன் ஆகியோர் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இருவரும் முதல் செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் 31 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்தது. இமாம்-உல்-ஹக் 36 ரன்னுடனும், முகமது ஹபீஸ் 48 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முகமது ஹபீஸ் 96 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய இமாம்-உல்-ஹக்கும் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

    அரைசதம் அடித்த முகமது ஹபீஸ் அதை செஞ்சூரியாக மாற்றினார். 172 பந்தில் 12 பவுண்டரியுடன் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அணியில் இடம்பிடித்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.



    2-வது செசனிலும் இந்த ஜோடி விக்கெட்டை இழக்கவில்லை. தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 199 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் 205 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

    இமாம்-உல்-ஹக் 188 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் முகமது ஹபீஸ் 208 பந்தில் 15 பவுண்டரியுடன் 126 குவித்து ஆட்டமிழந்தார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் இழக்காமல் விளையாடியுள்ளது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் இன்று தொடங்கியது. பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் பிலால் ஆசிப், ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட், ஆரோன் பிஞ்ச், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.



    இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். இருவரும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், நாதன் லயன் ஆகியோர் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.


    இமாம்-உல்-ஹக்

    முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். பாகிஸ்தான் 31 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் அடித்துள்ளது. இமாம்-உல்-ஹக் 36 ரன்னுடனும், முகமது ஹபீஸ் 48 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×